தெரிவிப்பது நாங்கள் – தீர்வு பெற்றுக் கொடுப்பது யார்……

-jp-

OLYMPUS DIGITAL CAMERAகாத்தானகுடி:காத்தான்குடி கடற்கரை விதி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் அமைந்துள்ளது மட்.அல் அமீன் வித்தியாலயம்.இவ்வித்தியாலயத்திற்குச் செல்லும் வீதியில் போடப்பட்டுள்ள வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்துள்ளமையினால் மாணவா்கள், பாதசாரிகள் ,பொது மக்கள் என பலரும் போக்குவரத்திற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மேற்படி பல நாட்களாக வடிகான் மூடிகள் பல நாட்களாக போடப்படாததினை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதினை அடுத்து அவசர அவசரமாக புதிய  வடிகான் மூடிகள் போடப்பட்டதாகவும் போடப்பட்டு மூன்று நாட்கள் கூட செல்லவில் லை இப்போதே மூடிகள் பல உடைந்து விட்டதாகவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய  சென்டராக  மட்.அல் அமீன் வித்தியாலயம் இருப்பதனால் அதிகமான உள்ளுார்,வெளியுர் மாணவா்கள் ,ஆசிரியா்கள், அதிகாரிகளும் இவ்வீதியினை அதிகளவு பயன்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

எனவே இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையல்லவா……….?OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment