தாம் வகிக்கும் பதவிகளில் இருப்பதையிட்டு வெட்கப்படுகிறோம்-மாவட்ட சமுர்த்தி மகாநாடுட்டில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.

– முகம்மட் சஜி
DSCF3801மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டம் கடந்த யுத்தகாலத்தை விட தற்போது சகல அடிப்படை அம்சங்களிலும் பின்தங்கி இலங்கையின் முதலாவது வறுமை மாவட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையிட்டு தாம் வகிக்கும் பதவிகளில் இறுப்பதையிட்டு வெட்கப்படுவதாக பொருளாதர அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான மகாநாடு சமீபத்தில் மட்டு தேபா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சால்ஸ் தலைமையில் இடம்பெற்றது.வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சான்த பன்டார மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுன்செலியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

2014ம் ஆண்டாவது வறுமையினை ஒழித்து மட்டு மாவட்டத்தினை சிறந்த வளமிக்க பிரதேசமாக மாற்றுவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று  இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உறையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment