பதுளை: தங்கத்தின் விலைப் பட்டியலை காட்சிக்கு வைக்காத தங்க வியாபார நிலைய உரிமையாளருக்கு 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் குற்றத்தினை ஒப்புக்கொண்டமைக்காக பதுளை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, செல்வி மஹேஷா பிரியதர்ஷனி த சில்வா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பதுளை நகரில் பிரதான தங்க விற்பனை நிலையத்தில் தங்கத்தின் விலைப்பட்டியலினை காட்சிப்படுத்தாது தங்க விற்பனை செய்து வந்த உரிமையாளர் தொடர்பாக பதுளை நுகர்வோர் அதிகார சபையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட குறித்த வியாபார உரிமையாளர் தான் செய்த குற்றத்தினை ஒப்புக்கொண்டமைக்காக ரூபா 10,000/- பத்தாயிரத்தினை தண்டப் பணமாக செலுத்துமாறு பதுளை குற்றவியல் நீதிபதி செல்வி மஹேஷா பிரியதர்ஷனி த சில்வா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேவேளை, மேலதிக விசாரணைகளை நுகர்வோர் அதிகார சபையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப் பிடத்தக்கது.TK
Published by
![130217132602_gold_bars_304x171_reuters[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/130217132602_gold_bars_304x171_reuters1.jpg?w=150&h=84)
Leave a comment