கென்ய சுதந்திரதின விழாவில் ஜனாதிபதியும் பாரியாரும் பங்கேற்பு

kenyaநைரோபி: கென்யாவுக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டின் சுதந்திர தின வைபவங்களிலும் பங்கேற்றார்.

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஜனாதிபதி அவர்கள் தென்னாபிரிக்காவிலிருந்து கென்யா பயணமானார்.

கென்யாவின் தலைநகர் நைரோபியை நேற்று மாலை சென்றடைந்த ஜனாதிபதி அவர்களுக்கு ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா உப ஜனாதிபதி வில்லியம் ரூடோ மற்றும் வெளிவிவகாரம் சர்வதேச வர்த்தக அமைச்சின் அமைச்சரவை செயலாளர் அமீனா மொஹமட் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். நேற்று வியாழக்கிழமை கென்யாவின் சுதந்திர தின வைபவங்களிலும் ஜனாதிபதியவர்கள் கலந்து கொண்டார்.

வர்த்தகம், சுற்றுலா, கலாசார கூட்டுறவு தொடர்பாக இரு தலைவர்களும் சனிக்கிழமை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் இலங்கை கென்யாவுக்கிடையே பல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படும். நியூயோர்க் மற்றும் ஜெனிவாவுக்கு அடுத்துள்ள மிகப்பெரும் ஐ.நா. அலுவலகம் கென்யாவின் தலைவர் நைரோபியலுள்ளது. இங்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ரைரோபி அலுவலகப் பணிப்பாளர் உட்பட பல தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

காலம் சென்ற ஜனாதிபதி ஜேங்மோ கென்யாட்டாவின் கல்லறைக்கு மலர் வளையம் செலுத்தி அஞ்சலி செய்த பின்னர் ரைரோபியிலுள்ள பெளத்த விகாரைக்கும் ஜனாதிபதி அவர்கள் செல்லவுள்ளார். ஜனாதிபதியுடன் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை குழுவினருக்கு கென்ய அரசாங்கம் விருந்துபசாரங்களையும் வழங்கவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், சிவில் விமான சேவைகள் அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன ஊவா மாகாண முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பி. சஜின்த வாஸ்குணவர்தன ஆகியோரும் ஜனாதிபதியுடன் கென்யா சென்றுள்ளனர். கடைசியாக 2000 ஆம் ஆண்டில் கென்யாவுக்கு விஜயம் செய்த அவர் குடியிருப்பாளர் நிகழ்ச்சி நிரல் தொடர்பான ஐ.நா. பொதுச் சபையின் விசேட கூட்டத்தொருக்கான தயாரிப்புக்குழுவின் ஆரம்ப கூட்டத் தொடரிலும் கலந்து கொண்டார். TK

kenya

Published by

Leave a comment