இலங்கையின் மோட்டார் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு மகுடம் சூட்டும் கண்கவர் கண்கவர் விருது வழங்கும் விழாவில் மகுடம் சூட்டப்பட்ட CEAT-SLADA சாம்பியன்கள் 2013 விருது வழங்கும் இரவு நேர பிரம்மாண்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமை ஏழாம் திகதி இடம் பெற்றது. இவ்வாண்டின் மோட்டார் ஓட்டப் பந்தயங்களின் நிறைவு நிகழ்வாக இது இடம்பெற்றது.
இரண்டு பிரதான சாம்பியன் விருதுகளும் 12 துணை விருதுகளும் இங்கு வழங்கப்பட்டன. நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் தமது ஆற்றல்களை நிரூபித்து ஆயிரக் கணக்கான பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தவர்களுக்கே இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டின் பிரதான ஆறு மோட்டார் ஓட்டப் பந்தயங்களில் அவர்கள் இந்த சாதனைகளை நிகழ்த்தி இருந்தனர். இலங்கையின் முன்னணி டயர் உற்பத்தியாளர்களான சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்தப் போட்டிகளுக்கான பிரதான அனுசரனையணை வழங்கியிருந்தது.
பொக்ஸ் ஹில் சுபர் குரொஸ், கவல்ரி சுபர் குரொஸ், கஜபா சுபர் குரொஸ், கன்னர்ஸ் சுபர் குரொஸ், மற்றும் கடுகுருந்தவில் இடம்பெறும் சீகிரிய மற்றும் ரொதர்ஹேம் சர்கிட் மீட் என்பனவே சாதனை புரிந்த வீரர்கள் பங்கேற்ற போட்டிகளாகும். இந்த வருடாந்த சாம்பியன்கள் மகுடம் சூட்டும் விழாவுக்கு சியெட் அனுசரணை வழங்கியுள்ளது இது நான்காவது தடவையாகும். இலங்கையில் பந்தய சாரதிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கான சிறந்த அங்கீகாரமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
இலங்கையில் மோட்டார் பந்தயத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் சாரதிகள் மற்றும் ஓட்டுனர்களை குழுவாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை மோட்டார் விளையாட்டு சாரதிகள் சங்கம் (SLADA) துரிதமாக மாற்றமடைந்து வரும் இந்த விளையாட்டுத் துறையின் தேவைகளை ஈடு செய்ய காலக் கணிப்பீட்டுக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் என்பனவற்றை அறிமுகம் செய்துள்ளது. மோட்டார் ஓட்டப் பந்தயங்கள் வெற்றி அடைகின்றன என்பதை உறுதி செய்ய SLADA இலங்கை இராணுவம், விமானப் படை என்பனவற்றின் பிரதிநிதிகளை தனது நிர்வாகக் குழுவுக்குள் உள்வாங்கியுள்ளது. நாட்டில் எந்தவொரு மோட்டார் ஓட்டப் பந்தயத்துக்கும் இந்த அமைப்பே முதலிடம் வகிக்கின்றது.
இவ்வாண்டின் மோட்டார் ஓட்டப் போட்டிகள் அனுபவம் மிக்க இரண்டு மோட்டார் கழகங்;களின் உதவியோடு மிகவும் தொழிற்சார் முறையில் நடத்தப்பட்டன. இலங்கை மோட்டார் விளையாட்டுக் கழகம் மோட்டார் ஓட்ப்பந்தய கழகம் ஆகிய அமைப்புக்களின் உதவியுடனேயே போட்டிகளை ஒழுங்கு செய்திருந்தது.
போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதற்கு மேலதிகமாக சியெட் நிறுவனம் இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை என்பன நடத்தும் போட்டிகளுக்கும் அனுசரணை வழங்குவதோடு இந்தப் போட்டிகள் பலவற்றில் தனது சொந்த அணியையும் களம் இறக்குகின்றது. சாரதிகளும் ஓட்டுனர்களும் தமது சொந்த ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ள இதன் மூலம் ஆதரவு அளிக்கப்படுகின்றது.
தற்போது இந்தியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சியெட் உலகளாவிய ரீதியில் 110 நாடுகளில் நிலைகொண்டுள்ள ஒரு வர்த்தக முத்திரையாகும். 1924ம் ஆண்டு காலப்பகுதியில் இத்தாலியில் தோற்றம் பெற்ற Cavi Electrici Affini Torino, Electrical Cables & Allied Products of Turin, என்பதன் சுருக்க வடிவமாக இது உள்ளது. இலங்கையில் ஆகக் கூடதலான விற்பனை கொண்ட ரேடியல் டயர் முத்திரை சியெட்டே ஆகும்.
Published by

Leave a comment