-Jalees mohamed-
அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் முன்னால் பொதுச் செயலாளரும் சிறந்த மார்க்க அறிஞருமான மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் (கபூரி) அவர்களின் மறைவு குறித்து பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தமது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துள்ளார்.
மர்ஹூம் மௌலவி றியாழ் (கபூரி) அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை தேசிய ரீதியில் மக்கள் மயப்படுத்தி அதன்பால் அனைத்து முஸ்லிம்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவருவதற்காக தமது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். கபூரியா அறபுக்கல்லூரியை உருவாக்கி அதனை சமூக நிறுவனமாக மாற்றுவதற்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண, உயர்தர மாணவர்களுக்கு இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம், அறபு போன்ற பாடவிதானங்களை உருவாக்கி அதனை அங்கிகரீக்கப்பட்ட பாடவிதானங்களாக கல்விப் பணிப்பாளராக இருந்து ஆற்றிய சேவை அளப்பறியது. அவருடைய சேவையும், பணிகளும் இந்த நாட்டில் வாழும் உலமாக்களுக்கும் ஏனைய சமய தலைவர்களுக்கும் ஒரு முன்மாதிரியானதாகும்.
எந்தவொரு எதிர்பார்ப்பம் இல்லாமல் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டு தன்னந்தனியனாக பல்வேறுபட்ட பிரதேசங்களிலும் மார்க்க ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் அதனை தீர்த்துவைப்பதில் மர்ஹும் முகம்மது றியாழ் கபூரி அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளார்கள்.
அவருக்கு எதிராக பல்வேறு நீதிமன்ற வழக்குகள் போடப்பட்டபோதும் அவைகளை எதிர்கொண்டு புனித இஸ்லாத்தினை வளர்ப்பதற்கு அவர்செய்த தியாகங்கள் ஏராளமானவை அன்னாரின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
எல்லாம்வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து அவரின் சேவைகளை அங்கிகரித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் அன்னாரின் குடும்பத்தினர் நண்பர்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
Published by

Leave a comment