களுத்துறை: இன்ஷா அல்லாஹ் எமது களுத்துறை ஹில் வீதியில் அமைந்திருக்கும் குல்லியதுல் ஹிழ்ரிய்யா அரபுக் கல்லூரியில் ஹிப்ழ் (குர்ஆன் மனனம்) பிரிவிற்கான புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
எனவே இணைந்து கொள்ள விரும்புவோர் (2013-12மாதம் -14,15) திகதிகளில் கல்லூரி மண்டபத்தில் நடைபெறும் நேர் முகப்பரீட்சைக்கு சமூகமளிக்கவும்.
மேலும் இவ்வருடம் நடைபெற்ற தேசிய ரீதியிலான அல்-குர்ஆன் மனனப்போட்டியில் எமது கல்லூரி மாணவர் ஒருவரே முதலிடம் பெற்று புனித மக்காவில் இடம்பெறவுள்ள சர்வதேச அல்-குர்ஆன் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:-
மேலதிகமாக மாணவர்களுக்கு தமிழ், கணிதம், சிங்களம், ஆங்கிலம் போன்ற பாடங்கள் நடாத்தப்பட்டு க. பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றனர்,
தொடர்புகளுக்கு :- 071-2090272 , 071-5955012
Published by
![quran11[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/quran111.jpg?w=150&h=97)
Leave a comment