காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ.ஜி.ஸாஹிர் ஹூஸைன் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அண்மையில்; மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.மனாப் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் பழைய மாணவரான இவர் காத்தான்குடி இலவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம், கந்தளாய் மஸ்ஜிதுல் தக்வா ஜூம்மா பள்ளிவாயல் ஆகியவற்றின் நிர்வாக சபை உறுப்பினரும், உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின் இணைப்பாளரான அல்ஹாஜ்.எம்.ஏ.ஓ.எம்.அப்துல் அஸீஸ் உம்மு சல்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a comment