பிரேசிலியா: எதிர்வரும் 2014 கோடை காலத்தில் பிரேசிலில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிக்கான பங்குபற்றும் நாடுகள், அவற்றின் குழுக்கள் மற்றும் நேர அட்டவணை என்பன வெள்ளிக்கிழமை 06-12-2013 மாலை பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவில் இடம்பெற்ற பீபா உலகக் கிண்ணம் 2014 தெரிவு மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்து.
இதன்படி, ஆசிய நாடுகளிலில் இருந்து ஜப்பான், கொரியா, அவுஸ்திரேலியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் அரபு நாடுகளின் செல்வ சீமான்களின் விளையாட்டாக கருதப்படும் உதைப்பந்தாட்டப் போட்டியும், அந்நாடுகளின் அணிகளும் இம்முறையும் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதியற்று வெளியேறி இருக்கின்றன. ஈரானின் வருகை, அரபுலகத்தை வழமைபோல் கோபத்தில் ஆழ்த்தியுள்ளமையும் ஓர் விசேட அம்சம்.
இந்த 4 நாடுகளும் ஏற்கனவே உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ளன. அரபுலகத்திலிருந்து இம்முறையு எந்த அணியும் தெரிவாகவில்லை.
‘பொஸ்னியா ஹெஸிகோவினா’ எனும் ஐரோப்பிய நாடு முதன் முதலாக உலகக் கிண்ணப்போட்டிக்குத் தெரிவாகி இருக்கின்றது ஓர் விசேட அம்சம். ஏனெனில், ஐரோப்பிய பலம் பொருந்திய உதைப்பந்தாட்ட அணிகளுடன் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் தனது திறமையை அபாரமாக வெளிக்காட்டி வெற்றியீட்டியதால்தான் ‘பொஸ்னியா ஹெஸிகோவினா’ அணிக்கு இந்த உலகக் கிண்ண வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
உலகக் கிண்ண 2014-முதலாவது போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 12ம் திகதி உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தும் நாடும், பலம் பொருந்திய அணியுமான பிரேசிலை எதிர்த்து, ஐரோப்பிய நாடான குரோசியா மோதுகின்றது. இது ஆரம்பப் போட்டியாக அமையும்.
இறுதிப் போட்டி ஜூலை மாதம் 13ம் திகதி மாலை ‘ரியோ டி ஜனீரியோ’ வில் இடம் பெறும்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் 100வது போட்டியை விளையாடும் ஒரே ஒரு அணியாக ஜேர்மணி திகழ இருக்கின்றது. இப்போட்டி போர்த்துக்களை எதிர்த்து ஜேர்மனி விளையாட இருக்கின்றமை மற்றுமொரு விசேட அம்சம்.
குழுக்களும், நாடுகளும்:
Group A: Brazil, Croatia, Mexico, Cameroon
Group B: Spain, Netherlands, Chile, Australia
Group C: Colombia, Greece, Côte d’Ivoire, Japan
Group D: Uruguay, Costa Rica, England, Italy
Group E: Switzerland, Ecuador, France, Honduras
Group F: Argentina, Bosnia-Herzegovina, Iran, Nigeria
Group G: Germany, Portugal, Ghana, USA
Group H: Belgium, Algeria, Russia, Korea Republic
Published by



Leave a comment