கொழும்பு: கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு வந்த அழைப்பினையடுத்து டேவிட்சன் வீதியில் உள்ள விடுதியொன்றிலிருந்து குறித்த இளைஞரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கண்டி, கலஹாவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் என்ற 26 வயதுடைய இளைஞர் ஒருவடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.குணதிலக்க வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
இந்த இளைஞரின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் கொலையா, தற்கொலையா என விசாரணை செய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் தொழில்புரிந்து வந்த குறித்த இளைஞர் அலுவலகத்திலிருந்து விடுதிக்குத் திரும்பிய பின்னர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அதனைக் கண்ட அயல்விடுதியில் உள்ள சிலர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளதுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அந்த இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
VK-
Published by

Leave a comment