ஆச்சரியப்பட வைக்கும் ஒரே மாதிரியான இரு சம்பவங்கள்: 1913 டிச. 5 அதிகாலை 1.45க்கு இடம்பெற்றதாகப் பதிவு!

rail/trainகொழும்பு: சாரதி எவருமின்றி சில தினங்களுக்கு முன்னர் ரயில் எஞ்சினொன்று தெமட்டகொடையிலிருந்து ரத்மலானை வரை பயணித்ததைப் போலவே, இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற சம்பவமொன்று நிகழ்ந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலொன்று வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த அதே நாளில் அதாவது 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி அதிகாலை 1.45 இற்கு இடம்பெற்றிருப்பதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அன்று நடந்த சம்பவத்தை அப்போது மூன்று சதத்திற்கு விற்பனையான எமது நிறுவனத்தின் ‘தினமின’ பத்திரிகை முன்பக்கச் செய்தியாக வெளியிட் டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரே தினத்தில் ஒரே நேரத்தில் இடம் பெற்ற சம்பவம் குறித்து அதிர்ச்சியூட்டும் இந்தத் தகவல் புகையிரத சேவையைச் சேர்ந்த மூத்த ஊழியர்களால் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது. 1913 ஆம் ஆண்டு சம்பவமானது, மாளிகாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் எஞ்சின் ஒன்று தானாக இயங்கி களனிவெலி ரயில் பாதையில் மாளிகாவத்தை, மருதானை, நிலையங்களைக் கடந்து கொழும்பு கோட்டை திசை நோக்கி சுமார் மூன்றரை கிலோ மீற்றர் தூரம் பயணித்து கப்பிதாவத்தை இந்து ஆலயம் வரை வந்து தரித்திருக்கின்றது.

இந்தச் சம்பவத்திலும் எந்த அனர்த்தமும் ஏற்படவில்லை.

முதன்முதலாக சாரதி இல்லாமல் சென்ற புகையிரதம் சுமார் 3.5 மைல் பிரயாணம் செய்திருக்கின்றது. கடந்த வாரம் சாரதி இல்லாமல் பிரயாணித்த புகைவண்டி சுமார் 15 கிலோ மீற்றர் வரை பயணித்திருக்கின்றது.

ஒரே நாளில் ஒரே நேரத்தில் இந்த ஆச்சரியத்தக்க சம்பவம் நடைபெற்றிருப்பதாவது சகலரையும் பேராச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

– தினகரன்

Published by

Leave a comment