கட்டாரிலிருந்து அஷ்ஷேய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
டோஹா: கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா சென்டரின் ஏற்பாட்டில் அல்-பனார் இஸ்லாமிய நிலையத்தின் அனுசரனையுடன், கட்டார் டோஹா விமான நிலைய வீதியில் கொமர்ஷல் வங்கிக்கு முன்னாள் அமையப்பெற்றுள்ள கட்டார் மஸ்ஜித் அப்துல் அஸீஸ் பள்ளிவாயலில் வாராந்தம் பல்வேறு பயான் நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக 05-12-2013 நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு குடும்ப வாழ்வை சீரழிக்கும் முக்கிய காரணிகளும் தீர்ப்பதற்கான வழிகளும் எனும் தலைப்பில் அஷ்ஷேய்க் பர்ஹான் (மதனி)யினால் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.
இவ் பயான் நிகழ்ச்சியில் கட்டாரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஆண்கள்,பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடல் கடந்து வாழும் மக்களை ஆண்மீக சூழலில் உருவாக்கும் நோக்கில் வாராந்தம் வியாழக்கிழமைகளில் குறித்த பள்ளிவாயலில் இரவு 8.30 மணி தொடக்கம் 8.45 மணிவரை நபிகளாரின் சீறா வரலாறும் 8.45 மணி தொடக்கம் 9.30 மணி வரை விஷேட தலைப்புக்களில் பயான் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளதாக கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா சென்டரின் தலைவர் அஷ்ஷேய்க் இத்ரீஸ் (ஸஹ்வி) தெரிவித்தார்.
Published by
![4[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/12/41.jpg?w=150&h=112)
![3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/12/31.jpg?w=624&h=468)
![4[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/12/41.jpg?w=624&h=468)
Leave a comment