காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் பிரதான வீதியையும் கடற்கரையையும் இணைக்கும் வீதியினை காபட் வீதியாக அமைக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தற்போது காலநிலை சீர்கேடு காரணமாக அவ்வீதியில் பூர்த்தி செய்யப்படாத பகுதிகளில் வீதியில் நீரும் பல்லமுமாக காணப்படுவதாள் அவ்வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து உடனடியாக இவ் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்களுடன் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக பேசியதுடன் நேரில் சென்று பார்வையிட்டு வீதியின் மிகுதி அபிவிருத்தி வேலைகளை துரிதப்படுத்துமாறு ஒப்பந்தக்காரர்களுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்தார்.
இப்பகுதி காபட் வீதியாக அமைக்கப்படுவதுடன் நவீன வடிகான் தொகுதியும் உள்வாங்கப்பட்டதுடன் வீதியின் இரு பக்கங்களிலும் இயற்கை எழில்மிகு வனமாக அமைப்பதற்குறிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
Published by

Leave a comment