‘யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கை மக்களிடம் சகவாழ்வு ஏற்பட்டுக்கொண்டு வருகின்றது’ – ரவூப் ஹக்கீம்

hakee– பழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கை மக்களிடம் சகவாழ்வு ஏற்பட்டுக்கொண்டு வருகின்றதென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றிய முழுமையான ஆய்வொன்றை மேற்கொள்ள இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் சலோக பெயானி வெள்ளிக்கிழமை (06) நீதியமைச்சில் அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பொன்றை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

முப்பது வருடகாலம் இலங்கையில் காணப்பட்ட யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து காணப்பட்டனர். இப்போது யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீள்குடியேற்றப்படும் நடவடிக்கையும் நிறைவு பெற்றுக்கொண்டு வருகின்றது.

Untitled-2[1]

வடக்கு மற்றும் கிழக்கில் மீள்குடியேற்றம் மற்றும் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்காக அரசின் முழுமையான பங்களிப்பு பற்றி மற்றும் அதுகுறித்த சிக்கல்கள் பற்றி திரு. பெயானி அமைச்சர் ஹக்கீமிடம் வினவினார். அதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் ஹக்கீம்,

மீள்குடியேறுபவர்களுக்கான  தேவைகள் மதிப்பீடு மற்றும் அதனை அடிப்படையாக கொண்டதொரு முழுமையான மீள்குடியேற்றத்திற்கான அவசியம் உள்ளதெனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம் தமிழ் சமூகம் மட்டுமன்றி முக்கியமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சமூகமும் இவ்வாறு காலம் கடந்த இடம்பெயர்ந்தோர் என்ற நிலையில் காணப்படுகின்றனர். 

மீள் குடியேற்றப்பட்ட மக்கள் அவர்களுக்கான சொந்தமான காணிகளை மீளப்பெறல், காணி உறுதியை பெறுவதில் காணப்படும் பிரச்சினைகள், அடிப்படை வாழ்வாதாரத்திற்கான சந்தர்ப்பங்களும் அதற்கான உரிய திட்டங்களும் இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இணக்கப்பாட்டுச் சபை மற்றும் சட்ட ஆலோசனை, உதவிகள் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நடைபெறும் சேவை பற்றியும் அமைச்சர் விளக்கிக் கூறினார்.

 hakee

திரு. பெயானி அவர்கள்  வடக்கு மற்றும் கிழக்கில் மீள்குடியேறியோருக்கான பரந்த கொள்கையொன்றின் அவசியம் பற்றியும் தேவைப்படின் ஒரு முழுமையான அரசியலமைப்பு சீர்திருத்த கட்டமைப்பொன்றை மேற்கொள்ளும் தேவைப் பற்றியும் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாவா பாரூக், நீதியமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், சட்டத்தரணி பாயிஸ் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Published by

Leave a comment