மனிதநேயம் படைத்த தேசத் தலைவரை உலகம் இழந்துவிட்டது

mahindaகொழும்பு: தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவு குறித்து பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவி வகிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஜுமாவுக்கு அனுப்பி வைத்துள்ள அனுதாபச் செய்தியில்; பொதுநலவாய அமைப்பு நாடு களின் தலைமைப் பதவி வகிக்கும் தான், தென்னாபிரிக்க ஜனாதிபதி அவர்களுக்கும் தென்னாபிரிக்க மக்களுக்கும் குறிப்பாக மறைந்த மாபெரும் தலைவரும் நவீன தென்னாபிரிக்காவின் ஸ்தாபகருமான மாண்புமிகு நெல்சன் மண்டெலாவின் குடும்பத்துக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாபெரும் தலைவர் நெல்சன் மண்டெலா உலகின் தன்னிகரற்ற தலைவர் என்ற அழியாப்புகழைப்பெற்றுள்ளார் என்றும் ஜனாதிபதி தனது செய்தியில் சுட்டிக் காட்டினார்.

அமரர் நெல்சன் மண்டெலாவின் தலைமையின் கீழ் 1994ம்ஆண்டில் தென்னாபிரிக்கா மீண்டும் பொதுநலவாய அமைப்பில் இணைந்து கொண்ட பின்னர் பொதுநலவாயத்தின் மதிப்பு உன்னத நிலை அடைவதற்கு உதவியாக அமைந்தது.

மனித குலத்தின் மதிப்பை அதிஉன்னத மட்டத்திற்கு உயர்த்தும் செயற்பாட்டுக்கு உந்து சக்தியாக நெல்சன் மண்டெலா விளங்கினார். இன்றைய நவீன வரலாற்றில் அவர் ஒரு தேசத் தலைவராக உயர்ந்திருந்தார்.

தன்னுடைய பெருமைக்குரிய வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையில் கழித்த இந்த பெரும் தலைவர் மண்டெலா, இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக போராடி தென்னாபிரிக் காவில் உரிமையும் சுதந்திரமும் மதிப்பும் இன்றி துன்பத்தில் துவண்டு கொண்டிருந்த மக்களுக்கு புது வாழ்க்கையைப் பெற்றுக் கொடுத்தார்.

நெல்சன் மண்டெலா ஆபிரிக்க கண்டத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய ஒரு மாபெரும் தலைவர். ஆபிரிக்க நாடுகள் பொதுநலவாய அமைப்பில் பிராந்திய ரீதியில் அதிக அளவிலான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகும்.

நெல்சன் மண்டெலா அவர்களின் வாழ்க்கை முழு உலகத்திற்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது என்று ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நாம் அனைவரும் தென்னாபிரிக்காவுக்கும் அதன் தேசத் தலைவரான நெல்சன் மண்டெலாவுக்கும் உரிய மதிப்பை வழங்க வேண்டுமாயின் அவர் பாடுபட்ட ஜனநாயக தாற்பரியங்களை பேணிப்பாதுகாக்க வேண்டுமாயின் பன்முகத்தன்மையிலும் ஒற்றுமையை வளர்க்கும் அவரது நல்லாலோசனையை கடைப்பிடிப்பது அவசியம் என்று ஜனாதிபதி அவர்கள் தமது செய்தியில் குறிப்பிட்டார்.

Published by

Leave a comment