கெப்டவுண்: தென்னாபிரிக்காவை ஆங்கிலயர் ஆட்சிசெய்யும்வரையும் அதனைத் தொடர்ந்தும் இனவெறிமோதல்கள் அங்கு நிலைகொண்டிருந்தன. வெள்ளை-கறுப்பு வெறியாட்டத்தில் பல இலட்சக்கணக்கானோர் உயிர் துறந்ததுடன் பலர் நிறவெறியில் சிறைப்படுத்தப்பட்டனர்.
தென்னாபிரிக்க அரசியல் வரலாற்றின் முதல் கறுப்பினத்தின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் சற்று முன்னர் மரணமடைந்துள்ளார் எனும் செய்தியை தெனனாபிரிக்க அரசு உறுதிப்படுத்தி இருக்கின்றது.
கறுப்பினத்திற்காககக் குரல் கொடுத்த தலைவர் என்பதற்காக 27 வருடங்கள் சிறைப்படுத்தப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா 1990ஆம் வருடம் விடுதலையாகி, அதன் பின்னர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவானார்.
பல வருடங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா, அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![mandela[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/mandela1.jpg?w=107&h=150)
Leave a comment