அரச பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

schoolகொழும்பு: நாடுமுழுவதிலுமுள்ள பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படுகின்றன. அனைத்துப் பாடசாலைகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் முதலாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன.

ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை முதலாம் தவணைக்காக பாடசாலைகள் இயங்கவுள்ளதுடன் ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 1 ஆம் திகதி வரை இரண்டாம் தவணைக்கான பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும், செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகள் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பாடசாலைகளில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதிவரை முதலாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளும், ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் ஜுன் 27 ஆம் திகதி வரை இரண்டாம் தவணையும், ஓகஸ்ட் 4 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை மூன்றாம் தவணைக் கல்வி செயற்பாடுகளும் இடம்பெறவுள்ளன.

Published by

Leave a comment