– அகமட் ஆஸிர்
Structure of Teeth – பற்களின் அமைப்பும் இறைவனின் அருட்கொடையும்.
இறைவன் மனிதனுக்களித்துள்ள எண்ணற்ற அருட்கொடைகளில் பற்களும் ஒன்றாகும். இறைவன் தனது விசாலமான நுணுக்கமான அறிவினால் முக்காலங்களுக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு படைப்புக்களையும் படைத்துள்ளான்.
ஆனால் அவற்றை விளங்கிக் கொள்வது மனிதனால் இன்னும் முடியாத விடயமாகவேயுள்ளது. இந்தவகையில் நாம் பற்களின் அமைப்பைப் பார்க்கும் போது அவற்றிலுள்ள உண்மைகள் மற்றும் இறைவனின் அருட்கொடை என்பவற்றை விளங்கிக் கொள்ளலாம்.
மனிதனில் இரண்டு வகையான பற்தொகுதிகள் காணப்படுகின்றன. 1.பாற்பற்கள்- ஆரம்ப வயதுகளில் முளைத்து பின்னர் விழுவது. 2.நிரந்தரப்பற்கள்.-.பாற்பற்கள் விழுவதைத் தொடர்ந்து முளைக்கக் கூடிய பற்கள். இந்தப் பற்கள் வடிவங்களில் மற்றும் தொழிலில் வேறுபட்டவையாக இருப்பினும் அவை ஒரு பொதுவான கட்டமைப்புக் கூற்றையும் மூலப் பொருட்களையும் கொண்டுள்ளன.
பல்லைப் பொதுவாக Crown and Root என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.இவை இரண்டுக்குமிடையே கழுத்து எனப்படும் சிறிய பகுதி காணப்படுகின்றது.
அத்துடன் பல்லானது வெவ்வேறு மூலப் பொருட்களைக் கொண்ட பல்வேறு படைகளாலானது. பல்லானது வெளியில் ஒரு கடினமான பொருள் போன்று இருந்தாலும் அதன் மையப்பகுதி என்பு மச்சைக் குழியை ஒத்த ஒரு குழியைக் கொண்டுள்ளது. அது pulp எனப்படும். Dental pulp ஐச் சூழ Dentine எனப்படும் அமைப்பும் Dentine சூழ Crown பகுதியில் Enamel உம் வேர்பகுதியில் Cementum உம் காணப்படும்.
Enamel
இது பல்லின் வெளிப்புறமாகக் காணப்படும் வன்மையான பகுதியாகும் மாத்திரமல்லாது இதுவே மனிதனின் உடலிலுள்ள அதிக வன்மையுள்ள பகுதியாகும். இதனால்தான் இது மனித உடலை எரித்தாலும் நிலைத்திருக்கக்கூடியது. எரிக்கப்பட்ட சடலங்களை பற்களைக்கொண்டு அடையாளம் காணும் சட்ட வைத்தியத்துறைக்கு உதவுகின்றது அத்துடன் இது மனிதன் மென்று உண்ணும் போது உருவாகும் அழுத்தத்தினால் பற்கள் கரையாது பாதுகாக்கின்றது. நுயெஅநட ஒளியை கசிய விடக்கூடிய தன்மையுள்ளது. Enamel கடினமானதாக இருப்பினும் அதனைத் தாங்க கீழாகவுள்ள னநவெiநெ இல்லாது போனால் அது நொறுங்கிவிடக்கூடிய தன்மையைக்கொண்டது.
Enamel இன் இரசாயனக்கலவை அமைப்பைப் பார்க்கும் போது அது நிறையளவில் 96% அசேதனச்சேர்வைகளையும், 1% சேதனச்;சேர்வைகளையும் , 3% நீரையும் கொண்டது.
அசேதனச்சேர்வை பிரதானமாக கல்சியம் பொஸ்பேட் Capo4 எனும் சேர்வை Hydroxy apatite வடிவில் கொண்டது.
அத்துடன் Carbonate, Magnesium, Potassium, Sodium (Na), Fluoride ஆகிவையும் சிறிய அளவில் காணப்படுகின்றன.
Dentine
இது (dental pulp) ஐச் சூழக் காணப்படுவதும் enamel க்கு கீழாக அமைந்துள்ளதுமாகும். இதுவே பல்லின் வடிவத்தைக்கொடுக்கக்கூடியது. இது enamel ஐ விட வலிமை குறைந்தது. dentine ஆனது 70% அசேதனக் கலவையையும் 20% சேதனக் கலவையையும் 10% நீரையும் கொண்டது. இந்த dentine ஆனது அதன்கட்டமைப்;பில் சில குழிகளை (dentinal tubules) கொண்டது. இந்த குழாய் போன்ற அமைப்பினுள் ஒரு வகையான பாய்;பொருளும் நரம்புகளும் காணப்படுகின்றன. ஆனால் இந்த நரம்பானது உணர்ச்சிகளை வௌ;வேறாகப் பிரித்தறியக்கூடியதல்ல. இதனால்தான் பல்லானது சூத்தையாகும் போது வலியை அல்லது ஒரு வகையான கூச்சத்தைக் கொடுக்கின்;றது.
Cementum
Crown பகுதியிலுள்ள dentine ஐ enamel மூடியிருப்பதைப் போல் வேர்ப்பகுதியிலுள்ள dentine ஐ Cementum (சிமென்டம்) மூடியுள்ளது. இந்த சிமென்டம் பல்லை பல் தாங்கு எலும்புடன் இணைக்கவும் உதவுகின்றது. இந்த ஊநஅநவெரஅ ஆனது னநவெiநெ ஐ விட மென்மையானது.
Cementum ஆனது 65% அசேதனச் சேர்க்கைகளையும் 23% சேதனச் சேர்க்கைகளையும் 12% நீரையும் கொண்டது.
Dental Pulp – பல் மச்சைக்குழி
திண்ணமான பல்லின் மையப்பகுதியில் காணப்படும் ஒரு குழிவான பகுதியே இதுவாகும். இதைப் பல்மச்சைக் குழி என்றும் அழைப்பர். இதுவே பல்லுக்குத் தேவையான இரத்த வினியோகத்தையும் நரம்பு வினியோகத்தையும் கொண்டுள்ளது. அத்தோடு இது ஒரு வகையான மென்மையான நார் அமைப்புக் கொண்ட இழையத்தினாலானது. இந்த dental pulp இலுள்ள உயிருள்ள கலங்கள் இறக்க நேரிடும் பட்சத்தில் பற்களால் வலியை உணர முடியாத நிலை ஏற்படுகின்றது. பற்களின் வேர்களின் நுனியில் காணப்படும் நுண்ணிய துவாரங்களினூடாக குருதிக் கலன்களும் நரம்பு நார்களும் dental pulp ஐ வந்தடைகின்றன. அங்கிருந்து சூழவுள்ள dentine இற்கு நரம்புகள் விநியோகிக்கப்படுகின்றன. மேலே dentine ஐப் பற்றிக் குறிப்பிடும் போது அதனுடைய குழாய் வடிவான அமைப்பினுள் காணப்படும் ஒரு வகைத்திரவப் பாயத்தில் ஏற்படும் வெட்ப தட்ப மாற்றங்கள் dentine ஐ வந்தடையும் நரம்பு நார்களைத் தூண்டி பல் வலியை அல்லது பற்கூச்சத்தை உருவாக்குகின்றன.
(தொடரும்)
தொகுப்பு – உம்மு ஷைமா அஸ்ஸாலிஹாத்
Leave a comment