மன்னார்: மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் ஏற்படக் கூடாது என்பதிலும் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் எதிர்கட்சியில் அமர்ந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிரிதரன் பாராளுமன்றத்தில் அண்மையில் ஆற்றிய உரை தொடர்பில் அரசாங்க கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை வண்மையாக கண்டித்துள்ள னர்.
பயங்கரவாதத்தை துாண்டும் சக்திகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் மேலோங்கி காணப்படுகின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அய்யா அவர்கள் இந்த கருத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினது அல்ல என்றும் இது தனிப்பட்ட ஒருவருடைய கருத்து என ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பது கூர்ந்து அவதானிக்க வேண்டியதொன்றாகும். விடுதலை புலிகள் அமைப்பினது தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரர் என்றும் அவர் தமிழருக்காக குரல் கொடுத்தவர் என்றும் பகிரங்கமாக சட்டம் வகுக்கும் பாராளுமன்றத்தில் கூறியதையடுத்து தமிழ் தலைவர்கள் பலர் விசனமடைந்துள்ளனர்.
கடந்த கால பேரழிவுக்கு காரணமாக இருந்தவர்களில் புலிகளின் தலைவர் பிரபாகரன என்று பகிரங்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த பல சந்தரப்பங்களில் கூறியதையும் அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு பயங்கரவாத அமைப்பின் செயல் என்பதை தெளிவாக கூறியுள்ளார். தற்போது யுத்தமில்லாத நிலையில் வடக்கில் சில இரானுவ கெடுபிடிகள் தொடர்பில் அவ்வப்போது அறிக்கைகள் வந்த போதும பெரும்பான்மையாக வாழும் தமிழ் பேசும் மக்கள் மிகவும் நிம்மதியாக வாழ்வதாகவே புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் வடக்குக்கு சென்றிருந்த இன ஒற்றுமைக்கான புரிந்துணர்வு அமைப்பு இந்த தகவலினை சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தது.
இது இவ்வாறு இருக்கும் போது அண்மையில் இடம் பெற்று முடிந்த வடமாகாண சபையின் தேர்தல் முடிவு வடக்கில் ஜனநாயக சூழல் இருக்கின்றது. அதனால் தான் என்றும் இல்லாதவாறு தமிழ் மக்கள் தமது பிரதி நிதிகளை தெரிவ செய்துள்ளார்கள் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவா மனித உரிமை கவுன்சுலுக்கு தற்போதைய இலங்கையின் நிலவரம் தொடர்பில் அறிக்கையொன்றினையும் இந்த அமைப்பு கையளிக்கவுள்ளதாகவும் அந்த சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழலில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமது முதலாவது உரையில் வடக்கில் முஸ்லிம்களின் தொடர்பில் தாம் கவனம் செலுத்தப்ப போவதாக தெரிவித்துள்ளதை முஸ்லிம்கள் பாராட்டியள்ளதுடன், ஒரு நல்ல ஆரம்பம் என்றே கருதியிருந்தனர். ஆனால் முதலமைச்சர் இந்த பணியினை செய்யக் கூடாது என்பதில் இனவாத, மதவாத சித்தாந்தங்களை கொண்டவர்கள் கடம் பிரயத்தனத்துடன் செயற்படுகின்ற விடயமும் முதலமைச்சருக்கு தெரியாமல் இல்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை பொருத்த வரையில் அவரது பண்புகள், அவர் கடந்த காலத்தில் வகித்துவந்த பதவி நிலை தொடர்பில் அவருக்கு தெளிவிருக்கின்றது. நீதியினை நியாயத்தினை அதனை கோறுபவர்களை மதிக்கும் பண்புள்ளவர். இந்த நிலையில் இருந்து அவர் தொடர்ந்து தமது முதல்வர் பதவியினை பயன்படுத்துவார் என்பது உறுதியான விடயம்.
குறிப்பாக கடந்த யுத்தத்தின் பின்னர் வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தொடர்பில் உடன்பாடு கொண்டவராகவே முதலமைச்சர் காணப்படுகின்றார் எனற உண்மையினை அண்மையக்காலமாக அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் ஆற்றும் உரைகளை பார்க்கும் போது தெரிகின்றது. வடக்கில் வாழும் மக்களுக்கு எதை செய்ய வேண்டும், எதனை செய்யக் கூடாது என்பன போன்ற யதார்த்த பூர்வமான பார்வையினை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இரந்த போது முதல்வர் இதனை செய்யக் கூடாது என்பதில் மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள், ஏற்கனவே பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும் அது பலனளிக்கவில்லை. மறிச்சுக்கட்டியில் தொடங்கி முல்லைத்தீவு வரை தமது சொல்லுக்கு ஆடும் சில அரசியல் வாதிகளை வைத்துக் கொண்டு அவர்களை துாண்டி மக்களை குழப்பி இந்த பணியில் தம்மை அடையாளம் காட்டியுள்ளார்.
வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களது காணிகளை அம்மக்கள் துப்பரவு செய்ய முற்பட்ட போது, ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும், இரானுவ தலைமைகளுக்கும், அமைச்சர் றிசாத் அரச காணிகளை பிடித்து இயற்கை வனவளத்தை அழிக்கின்றார் என்று கடிதம் எழுதினார். பின்னர் முஸ்லிம்களுக்கு சொந்த மன்னார் காணி தொடர்பில் சில நடவடிக்கையினை மேற்கொண்டார். அதுவும் தோற்றுப் போனது. இப்போது வட மாகாண முதலமைச்சரை மன்னாருக்கு அழைத்து அவரது இல்லத்தில் வைத்து முஸ்லிம் அமைச்சர் ஒருவர் எதேச்சதிகாரத்துடன் செயற்படுவதாகவும் இதன கட்டுப்படுத்த தமக்கு சில அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் நச்சரித்துள்ளார். இதனை தமிழ் ஊடகம் ஒன்று முன்பன்ன செய்தியாக படத்துடன் பிரசுரித்திருந்தது.
இந்த மன்னார் ஆயர் அவர்கள் முஸ்லிம்களின் எதிரியாக இன்று பார்க்கப்படுகின்றார். இவரது ஒவ்வொரு நடவடிக்கையும் வடக்கில் முஸ்லிம்கள் எங்கும் வாழக் கூடாது என்பதே. மதத் தலைவர்கைளை பொருத்த வரை இன உறவு, மத ஒருமைப்பாடு, மக்களின் விமோசனம் என்பவைகளையும் மக்களுக்கு நல்லதை நாலா புறத்திலிருந்தும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையும் குறிக்கொளாக கொண்டு செயற்பட வேண்டும். ஈனால் இந்த நிலை இந்த மத குருமாரிடத்தில் மருந்துக்கேனும் இல்லை என்பதை வட முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் இச்சந்திப்பின் பின்னர் புரிந்து கொண்டார்.
ஆயரின் முதலமைச்சருடான சந்திப்பபு முதலமைச்சருக்கு பல் வேறு புதிய தகவல்களையும் தரவுகளையும் கொடுத்துள்ளது. முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றத்திற்கு முன்னர் வாழந்த கிராமங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த 30 வருட காலத்தில் இம்மக்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னர் அவர்களது வாழ்வுரிமை தொடர்பில் அதி கூடிய கவனத்தை செலுத்தியுள்ளதை அறி முடிகின்றது.முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் வடமகாகண சபையின் தெரிவு உறுப்பினர் அய்யூப் அஸ்மினும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் முதலமைச்சருக்கு ஆயரினால் மற்றும் அங்கு இருந்த சில மதகுருமார்களால் முன் வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள் ஆதாரங்கள் இல்லாதவை என்பதை முதல்வர் தெளிவாக புரிந்து கொண்டுள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பவர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது மாவட்ட மக்களுக்கு அதிகமான உதவிகளை செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவது நியாயம் என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ளாதவர் அல்ல என்பதும் தெரியாத விடயமல்ல. எது எவ்வாறாக இருந்தாலும் வடக்கில் முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பில் அவர்களது இழப்புக்கள், மீள்குடியேற்றம் என்பன தொடர்பில் கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வடமாகாண சபையும் பின்பற்ற வேண்டும் என்பது யதார்த்தம். இந்த நிலையில் இனவாத சக்திகளும் மக்களின் இன உறவை பிரிக்கும் சக்திகளும் எவ்வளவு தான் அளுத்தங்களை முதல்வருக்கு கொடுத்தாலும் அவர் நேர்மையினை முன்னெடுப்பார் என்பது எதிர்வு கூறலாகும்.

Leave a comment