காத்தான்குடி: காத்தான்குடி அல்-பலாஹ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் இவ்வருடத்திற்கான மாணவர் கலைவிழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அல்-பலாஹ் முன்பள்ளியின் தலைவர் எம்.எம்.ஆரிப் தலைமையில் இடம் பெற்றது. வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.சிப்லி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட உயர்கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாலர்களின் கலை அம்சங்கள் இடம் பெற்றதுடன் முன்பள்ளி மாணவர்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் கெளரவிக்கப்பட்டனர்.

Leave a comment