காத்தான்குடி: பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள்,இளைஞர் யுவதிகள் ஆகியோருக்கு பெண்கள் மீதான வன்முறையை இல்லாமல் செய்தலும் பெண்களின் உரிமைகளை பாதுகாத்தலும் எனும்
தலைப்பில் நடாத்திய செயலமர்வில் பங்குபற்றிய 600 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 01-12-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது அதிதிகளினால் செயலமர்வில் பங்குபற்றிய 600 தமிழ்-முஸ்லிம் பேருக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் ,பெண்களே சிந்திப்போம் எனும் சிறப்பு மலரின் முதற்பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத்துக்கு வழங்கி மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இங்கு சமூக சேவையில் ஈடுபடும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உப பொதுச் செயலாளர் மௌலவி தாஸீம்,காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி அஸீஸ், மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும், காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம். அலியார் (பலாஹி), நகர சபைத் தவிசாளர் அஸ்பர், திட்டமிடல் பணிப்பாளர் இ.நெடுஞ்செழியன், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன, அமைச்சர் பஷீர் சேகுதாவூத், நீதியமைச்சரின் இணைப்பாளர் அமீர் ஹம்ஸா ஆகியோர் அவர்களின் சேவைகளை பராட்டி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்ட்டனர்.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சரும், ‘.ல.மு.கா கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உப பொதுச் செயலாளர் தேசமானிய மௌலவி எம்.எஸ்.எம்.தாஸீம் (கபூரி), மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.நூர்தீன், மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இ.நெடுஞ்செழியன், காத்தான்குடி நகர சபைத தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ் , பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஆலோசகரும்,நீதியமைச்சரின் இணைப்பாளருமான எம்.ஐ.அமீர் ஹம்ஸா உட்பட உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள் ,மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் உரிமைகளுக்காக பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment