புதிய பாடசாலைக் கட்டிடம் ஏறாவூரில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று மாலை திறந்து வைப்பு

DSCF3318– முகம்மட் சஜி

ஏறாவூர்: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் பாடசாலைக்கான புதிய கட்டிடம்  நேற்று மாலை மாணவர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

 இக்கட்டிடத்திறப்பு விழா மற்றும் பாடசாலையின் சாதணையாளர் கொளரவிப்பு வைபவம் ஆகியன பாடசாலையின் முதல்வர் எம். எம். எம். முவ்ஜூத் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றன.

நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கட்டிடத்திணை திறந்து வைத்ததுடன் மாணவர் கொளரவிப்பிலும் பங்கேற்றார்.

மேலும் பாடசாலை மாணவர்களின் கலை அம்சங்கள் இடம் பெற்றதுடன் சாதணைபடைத்த மாணவர்களும் கொளரவிக்கப்பட்டனர். அரசியல் பிரமுகர்கள் கல்வியாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSCF3318

Published by

Leave a comment