தனது பின் அங்கத்தில் மறைத்துவைத்து தங்கம் கடத்த முற்பட்ட பெண் கைது!

130217132602_gold_bars_304x171_reuters[1]கொழும்பு: இரண்டு தங்க பிஸ்கட்டுக்களை குதவாயில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து  இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட பெண் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான  நிலைய சுங்க அதிகாரிகள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

பெண் ஒருவர் பின்புறமாக குதவாயில் தங்க பிஸ்கட்டுக்களை மறைத்து கடத்திச் செல்ல  முற்பட்டமை இதுவே முதற் தடவையாகும் என்று சுங்க திணைக்களத்தின் சட்டப்  பணிப்பாளரும், பேச்சாளருமான லெஸ்லி காமினி தெரிவித்தார்.

இது தவிர உடம்பில் அணிந்த நிலையில் காணப்பட்ட மெருகூட்டப்படாத மூன்று வளையல்கள்  மற்றும் தங்க நெக்லஸ் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கமைய, 17  இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான 346 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள்  மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கைப் பிரஜையான 62 வயதுடைய பெண் ஒருவரிடமிருந்தே  இவை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

நேற்று முன்தினம் பிற்பகல் 4.05 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான  நிலையத்திலிருந்து சென்னை நோக்கி செல்லவிருந்த “எயார் இந்தியன்” விமானத்தில்  பயணிப்பதற்காக குறித்த பெண்மணி வருகை தந்துள்ளார். இந்த பெண்மணியின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் கொண்ட சுங்க  அதிகாரிகள் இப்பெண்ணை சோதனைக்குட்படுத்தியுள்ளனர். அதன் போது அந்த பெண்ணின்  உடம்பில் அணியப்பட்டிருந்த மெருகூட்டப்படாத மூன்று தங்க வளையல்கள் மற்றும் ஒரு  நெக்லசையும் எனினும் அந்தப் பெண்மணி தனது குதவாயில் பகுதியில் ஏதாவது மறைத்து வைத்திருக்கலாம்  என சந்தேகப்பட்டதை அடுத்து அந்தப் பெண் சுங்க அதிகாரிகளால் உடனடியாக நீர்கொழும்பு  வைத் தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கதிர்  பரி சோதனையின் மூலம் பின்புறமாக குதவழியில் தங்க பிஸ்கட்டுக்களை மிகவும் சூட்சுமமாக  மறைத்து வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் வைத்தியர்களின் உதவியுடன் 116 கிராம் எடையுடைய இரண்டு தங்க பிஸ்கட்டுகளை  மீட்டெடுத்துள்ளனர். தமது குதவழியில் தங்க பிஸ்கட்களை இது போன்று சூட்சுமமாக  மறைத்துச் செல்லும் ஆண்கள் கைது செய்யப்பட்டு மீட்டெடுக்கப்பட்டு வந்த நிலையில்  பெண் ஒருவர் இவ்வாறு மறைத்து கடத்த முற்பட்டமை இதுவே முதற் தடவையாகும் என்று  சுங்கத் திணைக்களம் தெரிவிக்கிறது. வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் மேற்படி சுங்க  அதிகாரிகளினால் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

உதவி சுங்க அத்தியட்சகர்களான ஹிமாலி லொக்குபாலசூரிய, நுவன் அபேநாயக்க, மஞ்சுலா  குமார, லலித் திஸாநாயக்க, சிசிர பெரேரா ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, குறித்த பெண் ணிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட தங்க பிஸ்கட்கள் மற்றும்  மெருகூட்டாத தங்க ஆபரணங்களை சுங்க திணைக்களம் பறிமுதல் செய்துள்ளதுடன் ஒரு இலட்சம்  ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

விரிவான விசாரணைகளை மேற்கொண்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் ஏ.கே.என். விக்ரமசிங்க இந்த  உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மீட்டெடுத்துள்ளனர். இதன் எடை 114 கிராம் ஆகும்.

எனினும் அந்தப் பெண்மணி தனது குதவாயில் பகுதியில் ஏதாவது மறைத்து வைத்திருக்கலாம்  என சந்தேகப்பட்டதை அடுத்து அந்தப் பெண் சுங்க அதிகாரிகளால் உடனடியாக நீர்கொழும்பு  வைத் தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கதிர்  பரி சோதனையின் மூலம் பின்புறமாக குதவழியில் தங்க பிஸ்கட்டுக்களை மிகவும் சூட்சுமமாக  மறைத்து வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் வைத்தியர்களின் உதவியுடன் 116 கிராம் எடையுடைய இரண்டு தங்க பிஸ்கட்டுகளை  மீட்டெடுத்துள்ளனர். தமது குதவழியில் தங்க பிஸ்கட்களை இது போன்று சூட்சுமமாக  மறைத்துச் செல்லும் ஆண்கள் கைது செய்யப்பட்டு மீட்டெடுக்கப்பட்டு வந்த நிலையில்  பெண் ஒருவர் இவ்வாறு மறைத்து கடத்த முற்பட்டமை இதுவே முதற் தடவையாகும் என்று  சுங்கத் திணைக்களம் தெரிவிக்கிறது. வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் மேற்படி சுங்க  அதிகாரிகளினால் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

உதவி சுங்க அத்தியட்சகர்களான ஹிமாலி லொக்குபாலசூரிய, நுவன் அபேநாயக்க, மஞ்சுலா  குமார, லலித் திஸாநாயக்க, சிசிர பெரேரா ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, குறித்த பெண் ணிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட தங்க பிஸ்கட்கள் மற்றும்  மெருகூட்டாத தங்க ஆபரணங்களை சுங்க திணைக்களம் பறிமுதல் செய்துள்ளதுடன் ஒரு இலட்சம்  ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

விரிவான விசாரணைகளை மேற்கொண்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் ஏ.கே.என். விக்ரமசிங்க இந்த  உத்தரவை பிறப்பித்துள்ளார்.

– தினகரன்

Published by

Leave a comment