சில ஊடகங்கள் எமக்கு எதிராக, இன ரீதியான பிளவுகளை தோற்று வைக்கும் வகையில் செயற்பட்டுவருகின்றன – அமைச்சர் றிசாத் பதியுதீன்

Risath Bஇர்ஷாத் றஹ்மத்துல்லா

வவுனியா: எமது வாழ்க்கை குறுகிய காலம் தான் இஎப்போது எமது மரணம் வரும் என்று தெரியாது. எனவே, நாம் வாழுகின்ற போது இஸ்லாத்திற்கு பொருத்தமாக வாழ வேண்டும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் எமது வசதிகளுக்கேற்ப வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார்.

வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆண்டியாப்புளியங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு மற்றும் பல்கலைக்கழகத்திற்கு 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்தி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது, 

எமது மாவட்த்தில் வாழும் மக்கள் அனைவரும் சமமானவர்கள். அம்மக்களுக்கு எது தேவையோ அதனை கண்டறிந்து அவற்றை பெற்றுக் கொடுப்பதை நாம் நேர்மையாக செய்துவருகின்றோம்.ஆனால் சில ஊடகங்கள் எமக்கு எதிராக, இன ரீதியான பிளவுகளை தோற்று வைக்கும் வகையில் செயற்பட்டுவருகின்றன. இது ஏன் என்று எமக்கு தெரியவில்லை.எம்மை பொருத்த வரையில் நாம் நீண்டகாலம் இந்த உலகில் வாழ்வதற்கு வந்தவர்கள் அல்ல. வாழ்கின்ற போது எல்லோருக்கும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம்.

இந்த வன்னி மாவட்டத்தில் கடந்த காலங்களில் கல்வி வளர்ச்சிக்கு எம்மால் ஆன உயர்ந்த பணிகளை செய்துள்ளோம்.பணிப்பாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் எம்மிடம் எதையெல்லாம் கேட்னரோ அவற்றை முடியுமான வரை பெற்றுக் கொடுத்துள்ளோம்.மாணவர்களை அல்லது பாடசாலைகளை மத ரீதியாகவே, இன ரீதியாகவோ பிரித்து நாம் பார்த்ததில்லை. யுத்த அழிவு என்பது அனைத்து இன மக்களையும் பாதித்துள்ளது.மாவட்த்தின் மக்களது இழப்புகளில் பெரும் பாலானவற்றை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். பாடசாலை கட்டிடம் முதல் உட்கட்டமைப்பு வசதிகள் வரை இவ்வாறு நாம் செய்கின்ற போது சிலர் எமக்கு எதிராக அப்பாவி மக்களை பிழையாக வழிநடத்தி அவற்றை இல்லாமல் ஆக்கும் பணியினை செய்வதுடன், அதனையும் இன ரீதியாக காட்ட முற்படுகின்றனர்.

எனது மாவட்ட நிதி ஒதுக்கீடுகளின் பட்டியலை நீங்கள் பார்த்தால் அதில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் நன்மை பெறுகி்ன்றனர். குறிப்பாக மாவட்டத்தினதும், மாணவ சமூகத்தின் கல்வி அபிவிருத்திக்கும் தேவையானதை அரசாங்கத்தனி் மூலம் பெற்றுவந்து கொடுத்துவருகின்றோம்.இம்மாணவ சமூகத்தின் கற்றல் செயல்பாடுகளுக்கு தடையேற்படுத்தும் வகையில் தயவு செய்து எவரும் செயற்பட வேண்டாம்.கற்ற சமூகத்தினை இப்பிரதேசங்களில் உருவாக்குவதன் மூலம் எமது மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எமது பிரதேசங்களில் உயர் பதவிகளில் பணியாற்றும் சந்தர்ப்பம் ஏற்படும். அது எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பினை செய்யும். பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியினை வறுமையினை காரணம் காட்டி இடை நடுவே நிறுத்திவிடுகின்றனர்.

அந்த வேலையினை செய்ய வேண்டாம்.ஏழ்மையும், வறுமையும் கல்விக்கு தடையாக வந்தாலும், அதனை சவாலாக கொண்டு பிள்ளைகளை கல்வியின் பால் ஆர்வமடையச் செய்வதன் மூலம் அவர்கள் கற்ற கல்வியூடாக எதிர்கால் சந்ததியினருக்கு நாம் உதவி செய்தவர்களாக மாறுவோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஜாபிர், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக, ஆளுரநின் பிராந்திய ஆணையாளர் ஷாஹிப் மொஹிதீன், முன்னால் நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி, அமைச்சரின் இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அதே வேளை பிரதேசத்தின் பல் துறை அபிவிருத்திக்கு தமது பங்களிப்புக்களை நல்கிய அல்ஹாஜ் றயீஸ், தொழிலதிபர் லியாகத் அலி ஆகியோருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

Published by

Leave a comment