காத்தான்குடி: காத்தான்குடி தாருல் ஹதீத் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பனிப்பாளர் கலாநிதி U. L. அஹமது அஷ்ரப் அஸ்ஹரியின் முயற்சியால் புதிய காத்தான்குடி பத்றிய்யா ஜும்ஆப் பள்ளி வாயலுக்கான மலசலகூட கட்டிட வேலைக்காக சஊதி அரேபிய மன்னர் காலித் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஸஃத் அஸ்ஸர்ஹானியினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சுமார் 344 000
ரூபா பணத்தை கையளிக்கும் நிகழ்வு மேற்படி பள்ளிவாயலில் அதன் தலைவர் அல்ஹாஜ் ஹனீபா அதிபர் தலைமையில் 29-11-2013 வெள்ளி;க்கிழமை இரவு நடைபெற்றது.
இதன் போது தாறுல் ஹதீத் நிறுவனத்தின் காத்தான்குடிக் கிளைப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் MACA. நாஸர் (ஜமாலி) யினால் மேற்படி பணம் புதிய காத்தான்குடி பத்றிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலின் பொருளாளர் அல்ஹாஜ் கபூர் (காதர் ஹாஜியார் ) வசம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புதிய காத்தான்குடி பத்றிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல் செயலாளர் ஜனாப் ஜரூப் GSO உட்பட ஏனைய நிருவாகிகளும் தாறுல் ஹதீத் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்களான அஷ்ஷெய்க் MA. அன்ஸார் மதனி , அஷ்ஷெய்க் MA. அன்வர் அலி ஜமாலி ஆகியோர் கலந்துகொண்டனர்.


Leave a comment