-டீன்பைரூஸ்–
காத்தான்குடி.காத்தான்குடி-௦6, மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் (காத்தான்குடி பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால்)அமையப்பெற்ற ஐம்பது வருட வரலாற்றுத் தொன்மை மிக்கதும், பழம்பெரும் மஸ்ஜிதுமான அஸ்செய்யது செயின் மௌலானா மஸ்ஜிதிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (01.12.2013 ஞாயிறுக்கிழமை) நாளை காலை 05.30 சுபஹ் தொழுகையைத் தொடர்ந்து இடம் பெற வுள்ளது.
மேற்படி பள்ளிவாயல் கீழ்த்தள வாகனத் தரிப்பிட வசதிகளைக் கொண்டதுமானதாக, பாரியளவிலான திட்டத்துடன் புதிய மூன்று மாடிகளைக் கொண்டு பள்ளி வளாகத்தில் அமையப் பெறவுள்ள அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுக்கு சங்கைமிக்க உலமாக்கள், காத்தான்குடி மஸ்ஜித்களின் நிருவாகிகள், ஊர்த்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், மஹல்லாவாசிகள், பொதுமக்கள் என அனைவரும் சிறப்புமிகு நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
எனவே இச்சிறப்பு மிக்க நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்படன் அழைக்கின்றோம்.
நிர்வாகம்.
அஸ்செய்யது செயின் மௌலானா மஸ்ஜித்.
தகவல்.
-மௌலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி-JP-
(பேஷ் இமாம், மஸ்ஜித் அஸ்செய்யது செயின் மௌலானா)
Leave a comment