போர்ட் எலிசபெத்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றது மிகப்பெரிய சாதனை என பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
இதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, வரலாற்று சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் தென் ஆப்ரிக்க மண்ணில் வெற்றியை சுவைத்த முதல் ஆசிய அணி என்ற சிறப்பையும் பெற்றது.
இதுகுறித்து அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் கூறுகையில், இளம் வீரர்கள் அடங்கிய அணியை வைத்துக் கொண்டு, தென் ஆப்ரிக்காவை சொந்தமண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது எங்களைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய சாதனை.
போட்டிகளில் கடினமான சூழ்நிலையை, எப்படி திறமையாக கையாள்கிறோம் என்பதை பொறுத்து தான் வெற்றி கிடைக்கும். சமீபத்தில் துபாய், அபுதாபியில் நடந்த போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இருப்பினும், தோல்வியில் இருந்து மீண்டு வந்து வெற்றி பெற்றது அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது, இதன் மூலம் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார். Ls
Leave a comment