அமெரிக்காவின் கருப்பு வெள்ளி இன்று

us– SHM

வாஷிங்டன்: அமெரிக்க வீதிகளில் அதிகமான கார்களும், மக்களும் நடமாட்டம் இருக்கும் நாள் எது என்று கேட்டால், இன்றைய ‘கருப்பு வெள்ளி தினம் (Black Friday) என்று சொல்லிவிடலாம். அமெரிக்காவில் நன்றி கூறும் நாள் (Thanks Giving) என்று நவம்பர் மாதம் கடைசி வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

நண்பர்களும் உறவினர்களும் தங்கள் நன்றியை பகிர்ந்து கொள்ளவும்,  குடும்பத்தினருடன் உற்சாகமாக செலவிடும் நாளாகவும் இது அமைகிறது.

அடுத்த நாளான வெள்ளிக்கிழமை,  Thanks Giving என்று அழைக்கப்படுகிறது. இது வணிக நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஒரு சேர மகிழ்ச்சியான நாளாகும். அனைத்து நிறுவனங்களுமே, தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்கின்றன. அதனால் வாடிக்கையாளார்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கும் நாளாக இதை கருதுகின்றனர். வணிக நிறுவனங்களுக்கோ, வருடத்திலேயே மிக அதிகமாக விற்பனை நாள் இதுவே.

1863 ஆம் ஆண்டில் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் Thanks Giving Day ஐ அமெரிக்க அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். வல்மர்ட் உள்ளிட்ட சில்லரை விற்பனை நிறுவனங்கள் அன்றைய தினம் மூடியிருக்கும். முதலில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடைகளை திறந்து தள்ளுபடி விற்பனையை ஆரம்பித்தார்கள். அதனால் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாகியதால் பிலடெல்பியாவில் 1961 முதல் அன்றைய தினத்தை கருப்பு வெள்ளி என்று அழைக்கத் தொடங்கினர்.

us

1975 முதல் அந்த பெயர் அமெரிக்கா முழுவதும் பரவலாக அழைக்கப் படலாயிற்று.முன்னர், அதிகாலையில் திறந்த நிறுவனங்கள், பிறகு நள்ளிரவு திறக்க ஆரம்பித்தனர். தற்போது அனேக மாநிலங்களில், வியாழக்கிழமை 6 மணிக்கே வியாபாரம் ஆரம்பமாகி விடுகிறது.

 குறைந்த அளவிலான பொருட்களே, அதிகமான தள்ளுபடியில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. ஆகையால் அதை வாங்கிக் கொள்ளுவதற்காக பெரிய திள்ளு முள்ளு நடக்கிறது. மணிக்கணக்கில் கடைவாசலில் காத்திருந்து வாங்குபவர்கள் ஏராளம். டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களுக்கு வாசலிலேயே கூப்பன் கொடுத்து விடுகிறார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Published by

Leave a comment