கொழும்பு: பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படவிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. பாடசாலைகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் முதலாம் தவணைக்காகத் திறக்கப்படவுள்ளன.
ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை முதலாம் தவணைக்காக பாடசாலைகள் இயங்கவுள்ளதுடன், ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்பட வுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 1 ஆம் திகதி வரை இரண்டாம் தவணைக்கான பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும், செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகள் இடம்பெறுமென்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதிவரை முதலாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளும், ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் ஜூன் 27 ஆம் திகதி வரை இரண்டாம் தவணையும், ஓகஸ்ட் 4 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை மூன்றாம் தவணைக் கல்வி செயற்பாடுகளும் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, 2013 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி ஆரம்பித்து 20 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment