மட்டக்களப்பு கொத்தியவல மகாவித்தியாலயத்தில் கட்டிட அபிவிருத்திகளை மேற்கொள்ள பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் திட்டம்

DSCF2468– முகம்மட் சஜி

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் காணப்படும் கொத்தியவல மகாவித்தியாலயத்தில் மாணவர்கவளின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான புதிய கட்டிடங்களை அமைத்து, அப்பகுதி மாணவர்களின் கல்விசார் நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கொத்தியவல மகாவித்தியால மாணவர்களுக்கும் இவ்வுதவிகள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலையின் முதல்வர் சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கொத்தியவல பொலிஸ் பொருப்பதிகாரி நிலங்க உள்ளிட்ட பலரும் பங்கேற்று இவ்வுதவிகளை வழங்கிவைத்ததுன் பாடசாலையின் சுற்றுப்பகுதிகளையும் பார்வையிட்டனர்.

DSCF2461

DSCF2495

DSCF2468

Published by

Leave a comment