பாடசாலை கல்வித் திட்டத்தில் பாலியல் கல்வி?

teacher_200_148[1]கொழும்பு: பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி தொடர்பான விடயப் படிப்பை உள்வாங்க இதுவரை திட்டமிடப்படவில்லை என ஆளும்தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். வாய்மூல விடைக்காக ரோஷி சேனாநாயக்க எம்.பி. கல்வி அமைச்சரிடம் கேட்டிருந்த கேள்விக்கான பதிலை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபையில் சமர்ப்பித்தார்.

பாலியல் கல்வியை பாடத் திட்டத்தில் உள்ளடக்குவது தொடர்பில் ரோஷி சேனாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்க திட்டமிடப்படவில்லை. ஆனால் சுகாதாரம், விஞ்ஞான பாடத் திட்ட விதந்துரைகளில் பாலியல் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த தரத்திலும் பாலியல் கல்வியை உள்ளடக்குவது குறித்து திட்டமிடப்படவில்லை எனவும் அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by

Leave a comment