இன்று நள்ளிரவு சூரியனை நோக்கி பாய்கிறது ஐஸான் வால் நட்சத்திரம்!

28-1385616201-comet-ison-2-600[1]– SHM

வாஷிங்டன்: உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருக்கின்றனர்.  இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணியிலிருந்து 12:30 மணிக்கிடையில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகில் போகிறது.

உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும், விண்ணியல் ஆர்வலர்களின் கண்களும் ஐசான் வால்நட்சத்திரத்தை நோக்கி திரும்பியுள்ளன. ஐசான் என்னாகப் போகிறது, சூரியனுக்கு அருகே அது போகும்போது என்ன நடக்கும் என்ற பேரார்வம் அத்தனை பேர் மனதிலும் கிடக்கிறது.

படு வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஐசான் இன்று நள்ளிரவு சூரியனை மிக மிக அருகே நெருங்கப் போகிறது. அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை. பொசுங்கிப் போய் விடும் என்று பொதுவான கருத்து இருந்தாலும் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு மிக மிக அருகே இன்று போகும் காட்சியை நேரடியாக தொலைநோக்கிகள் மூலம் காண பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி அமைப்புகள், கோளரங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

விணணில் நிலை கொண்டுள்ள சோஹோ என்று அழைக்கப்படும் சோலார் அன்ட் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்ற விண்வெளி தொலைநோக்கி மூலமும், ஐசான் சூரியனை நெருங்கும் காட்சியை நேரடியாக காட்ட நாசா ஏற்பாடு செய்துள்ளது. சோஹாவில் பல்வேறு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்தனையும் சூரியனை ஆய்வு செய்வதற்காக பொருத்தப்பட்டவையாகும். இந்த சோஹா,  1995ம் ஆண்டு ஏவப்பட்டதாகும். இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

 

Published by

Leave a comment