2013 தேசிய மீலாத் விழா அல் குர் ஆன் மனனப் போட்டி பெண்களுக்கான ஆரம்ப பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்ற மட்டு-சிசிலியா பெண்கள் உயர்தப் பாடசாலை காத்தான்குடி மாணவி பழுலுல்லாஹ் பாத்திமா பதீனா

Fatheena Falulullahபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2013 தேசிய மீலாத் விழா இறுதிப் போட்டியில் (அல் குர் ஆன் மனனம் பெண்களுக்கான ஆரம்ப பிரிவில் ) தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தப் பாடசாலை தரம் 5 காத்தான்குடி மாணவி பழுலுல்லாஹ் பாத்திமா பதீனா பெற்றுள்ளார்.

மேற்படி இறுதிப் போட்டி 23-11-2013 சனிக்கிழமை கொழும்பு -12 ஹமீட் அல் ஹூஸைனியா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தையும்,தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்ற இம்மாணவி சிரேஷ் ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.எல்.பழுலுல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர் ஜனாபா பௌசியா ஆகியோரின் மகளுமாவார்.

இம் மாணவி மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்றதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதக்கம் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாமினால் கல்முனையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பழுலுல்லாஹ் பாத்திமா பதீனா அவர்களுக்கு ‘யுவர் காத்தான்குடி’ இணையதளமும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.  

Fatheena Falulullah

Published by

Leave a comment