பிரிஸ்பேன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணி வீரர்களுக்கு இடையேயான வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கின்றன.
பிரிஸ்பேனில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. வழக்கத்தை விட இந்த தொடரில் வீரர்களுக்கு இடையேயான மோதல் அதிகமாக உள்ளது.
போட்டியின் போது அண்டர்சனைப் பார்த்து அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க், உடைந்த கையுடன் செல்லத் தயாராக இருங்கள் என்று தெரிவித்தார், விசாரணையில் இதை ஒப்புக் கொண்ட கிளார்க்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் கிளார்க் இப்படி பேசும் அளவுக்கு தூண்டிய அண்டர்சனை விசாரிக்காமல் விட்டது தவறு என வர்ணனையாளராக இருந்த முன்னாள் வீரர் வார்ன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அண்டர்சன் என்ன கூறினார் என்று விசாரிக்காமல், கிளார்க்கிற்கு அபராதம் விதித்தது வெறுக்கத்தக்க செயல்.
இப்போட்டியில் அண்டர்சன் அருகில் பெய்லி பீல்டிங் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரை பார்த்து உன் முகத்தில் குத்துவேன் என ஆண்டர்சன் மிரட்டினார்.
பெய்லி எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தார், அணித்தலைவர் என்ற முறையில் பதிலடி தரும் வகையில் கிளார்க் அப்படி பேசினார்.
ஒரு சர்வதேச வீரர் திட்டுவது என்று முடிவெடுத்து விட்டால், இதற்கு பதிலடி தான் தர வேண்டும், தவிர புகார் செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளார். Ls
Leave a comment