– KCC Media Unit
காத்தான்குடி: 2013ம் ஆண்டின் தேசிய மீலாத் விழாப் போட்டிகள் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் கடந்த 23.11.2013 அன்று கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இதில் எமது கல்லூரி சார்பாக மாகாண மட்ட கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொண்ட MRM. றிப்அத் என்ற மாணவன் தேசிய மட்ட கிராஅத் போட்டியிலும் முதலாம் இடம்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அம்மாணவனுக்கு எமது கல்லூரி சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு இப்போட்டி நிகழ்ச்சிக்கு மாணவனை தயார்படுத்தி அழைத்துச் சென்ற கல்லூரியின் இஸ்லாம் பாட ஆசிரியரும் ஒழுக்காற்றுக் குழுத் தலைவருமான அல்ஹாஜ் HM. ஷாஜஹான் (பலாஹி) அவர்களுக்கும் எமது நன்றிகள்.
– அதிபர்

Leave a comment