அங்கோலா நாட்டில் இஸ்லாத்துக்குத் தடை: பள்ளிவாயல்களை உடைக்க உத்தரவு!

125px-Flag_of_Angola.svg[1]– MJ

லுஆண்டா: ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலாவில் பள்ளிவாயல்களை உடைக்க அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து அங்கோலா நாட்டின் கலாசாரத்துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை என தெரிவித்திருக்கின்றது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அங்கோலா ஜனாதிபதி ஜோஸே ஈடுர்டோ, நாட்டில் இஸ்லாமிய செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அங்கோலாவில் 5 இலட்சம் முஸ்லிம்களும், 80 பள்ளிவாயல்களும் இருக்கின்றன. 1975ம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டிடமிருந்து விடுதலையடைந்த அங்கோலா, கிறிஸ்துவத்தைப் பிரதான மதமாக பின்பற்றி வருவதுடன், அந்நாட்டு தேசிய மொழியாக போர்த்துக்கீஸ் இருந்து வருகிறது.

நவம்பர் மாத இறுதியுடன் இஸ்லாம் முற்றாக இந்நாட்டில் தடை செய்யப்படுமிடத்து, உலகில் முதன் முதலில் இஸ்லாத்தைத் தடைசெய்யும் நாடாக அங்கோலா அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரைக்கும் இவ்விடயத்தில் அமெரிக்க சார்ந்திருக்கும் அரபு நாடுகள் எவையும் இங்கு இஸ்லாம் தடை செய்யப்பட்டதைக் கண்டிக்க வில்லை என்பதும் வேதனையான ஓர் விடயம்!

Published by

Leave a comment