மனைவியின் கைப்பையில் சிகரட்: விவாகரத்து கோருகிறார் சவூதி இளைஞர்

smoke– SHM

ஜிசான்: சவூதியில் உள்ள ஜிசான் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் அவர் அண்மையில் தனது மனைவியின் கைப்பையில் சிகரெட் இருப்பதை பார்த்தார். இதையடுத்து அவர் விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தான் புகைப்பிடிக்கவில்லை என்றும்,

பையில் இருந்தது தன்னுடைய சிகரெட் இல்லை என்றும் அந்த பெண் எவ்வளவோ கூறியும் அவர் அதை கேட்கவில்லை.

மேலும் அந்த நபரின் மனதை மாற்றும் முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. கைப்பையில் இருந்த சிகரெட் தன்னுடைய மனைவியுடையது தான் என்று அந்த நபர் ஆணித்தரமாக நம்புகிறார்.

சவூதி அரேபியாவில் சுமார் 6 லட்சம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதுடன், மேலும் பள்ளி மாணவ, மாணவியர் உள்பட பதின்வயதினர் 8 லட்சம் பேருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளன.

கணவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்து அதனால் பாதிக்கப்படும் பெண்கள் விவகாரத்து கோரலாம் என்று சவூதி நீதிபதி ஒருவர் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment