புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இடமாற்றம்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: தற்போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும்  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தும் நிகழ்வு நேற்று 24 ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு நகர மகாத்மா காந்தி பூங்கா முன்றலில் இடம்பெற்றது.

இதன் போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தபட்டது.

இவ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா மற்றும் மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டார ஹக்மன,வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன,களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குனசேகர ,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன ,ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் அலிசாஹிர் மௌலானா ,மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல் ஹாஜியார்,சிவில் அமைப்புக்களின் பிரதிநிகள் ,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment