மட்டக்களப்பு: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தற்போது கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவை கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு நேற்று 24 ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியடசகர் லால் செனவிரட்ன தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் பெற்றுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் சேவையை பாராட்டி மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வாவினால் நினைவுச்சின்னம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.
இங்கு புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் பெற்றுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் சேவையை பாராட்டி பொலிஸ் அதிகாரிகளினால் பல்வேறு உரைகள் இடம்பெற்றது.
இப் பிரியாவிடை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா மற்றும் மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டார ஹக்மன,வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன,களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குனசேகர ,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன , மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




Leave a comment