ஜெயபாலன் நாடு கடத்தப்டுவார்!

jajabalan_200_147[1]கொழும்பு: விசா விதி முறைகளை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளாரென குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர். 

 
தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெயபாலன் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா – மாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். 
 
சுற்றுலா விசாவில் இலங்கை வந்த நோர்வே பிரஜை ஜெயபாலன், விசா விதிமுறைகளை மீறி பிரிவினையைத் தூண்டி யாழ்ப்பாணத்தில் கூட்டங்களை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். lk

Published by

Leave a comment