காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு பொது நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்ற மேலதிக வருமானங்கள் அற்ற குர்ஆன் மதரசாக்களுக்கு குடி நீர் வடிகட்டி வழங்கி வருகின்றது. இந்நிகழ்ச்சி நிரலின் கீழ் அமைப்பினது முதல்வர் இல்மி அஹமட் லெவ்வையினால் காத்தான்குடி இப்றாஹிமிய்யா மதரசாவுக்கும் அண்மையில் வடிகட்டி (Water Filter) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைப்பினது பொருளாளர் MMM. தாஹிர் ஹாஜியார், உபசெயலாளர் முஸம்மில், உப தலைவர் அல்ஹாஜ். MIM. ஹூசைன் மற்றும் அல்ஹாஜ்.MSM. அப்துல்லாஹ் JP, SDO (முஅல்லிம்) உள்ளிட்ட நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.


Leave a comment