இங்கிலாந்து ராஜாக்களையும் மிஞ்சிவிட்ட ஜனாதிபதியின் செலவு நாளொன்றுக்கு 2 கோடி!

money_srilanka[1]– M70

லண்டன்: 2014 வரவு செலவு அறிக்கையின்படி, ஜனாதிபதிக்கான ஒரு வருடத்துக்கான செலவு ரூ. 857 கோடி  ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேதான்.

இலங்கையின் நிதியமைச்சரும் அவரே. அவரது பொறுப்பிலேயே நிதி இருப்பதால் இதனால் தனக்கான செலவுக்கு  நிறைய பணத்தைப் போட்டு நிரப்பி அதை முறைப்படி நாடாளுமன்றத்திலும் பட்ஜெட் மூலமாகவும் அறிவித்துள்ளதாக உலக நாடுகள் அதிருப்தியடைந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் 2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ராஜபக்சே தாக்கல் செய்து பெரிய உரையும் நிகழ்த்தினார். ஜனாதிபதியின் இந்த பட்ஜெட்டையும்,  அவரது பேச்சையும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி  மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை புறக்கணித்து இருந்தன.

பட்ஜெட் உரையின்போது காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் வெற்றிகரமாக நடத்தியதற்காக பெருமைப்படுவதாக சிரித்துக் கொண்டே கூறினார் ஜனாதிபதி.

இந்த பட்ஜெட்டில் ஜனாதிபதியின் வருடாந்திர செலவுகளுக்காக ரூ. 857 கோடியை ஒதுக்கியுள்ளனர். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு அவருக்கு ரூ 2 கோடி செலவிடப்பட இருக்கின்றது..

இங்கிலாந்தில் ராஜ குடும்பத்துக்கே ஆண்டு செலவாக வருடத்திற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ. 850 கோடிதான் ஒதுக்கிறார்கள். ஆனால் அதை விட தனக்கு அதிகமாக ஒதுக்கி, இங்கிலாந்து அரச பரம்பரைகளையும் மிஞ்சி விட்டதாக வெளிநாட்டுப் பத்திரிகைகள் தெரிவித்திருக்கின்றன.

எனினும், இந்த வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு அதிக நன்மைகளை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment