‘சாமசிறி’ பட்டம் வழங்கி கௌரவிப்பு

unnamedஅபூ ஸலாமா

திருகோணமலை: 2013.11.23ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலை புனித மரியால் கல்லூரியில் அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண கௌரவ அமைச்சர் எம்.எஸ். உதுமான் லெப்பை மற்றும் பலர் அதிதியாக பங்கு பற்றிய நிகழவில் திருகோணமலை, ஜமாலியாவை பிறப்பிடமாக கொண்ட பீர்பான்ஷா இர்ஷாத் (ஈஸா) அவர்களின் பலவருட சமூக சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் ‘சாமசிறி’ பட்டம் வழங்கி கௌரவிக்கபட்டார்.

இவர் திஃதிஃஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும், ஜமாலியா மீனவர் கூடடுறவுச் சங்கத் தலைவரும், ஜமாலியா மீனவர் கிராமிய மகா சம்மேளனத்தின் தலைவரும், திருகோணமலை கடல் மீனவர் பாதுகாப்பு ஐக்கிய மீனவர் சம்மேளனத்தின் செயலாளரும், விக்னேஸ்வரா மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினரும், திருகோணமலை நகர பிரஜைகள் குழு உறுப்பினரும், லவ்லேன் சுனாமி வீட்டுத்திட்டத்தின் செயலாளரும் ஆவார். முஹம்மது ராசா பீர்பான்ஷா – முத்து முஹைதீன் நாச்சியார் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வருமாவார். 

 

unnamed

Published by

Leave a comment