பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

protest1[1]கொழும்பு: பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை சுயாதீனமான குழு என தம்மை கூறிக் கொண்ட குழுவினர் நடத்தினர்.

கொழும்பில் அண்மையில் முடிவடைந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், போர் குற்றங்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் சுதந்திரமான வெளிப்படையான விசாரணைகளை நடத்தவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு வழங்கப்படும் என இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தம்மை சுயாதீனமான குழுவினர் என்று கூறிக் கொண்டாலும் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் பல சந்தேகங்கள்  இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

protest1[1]

Published by

Leave a comment