தனியார் பஸ்களுக்கு முற்கொடுப்பு அட்டைகள்

busகொழும்பு: மொபிடெல் நிறுவனத்தின் உதவியுடன் தனியார் பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டை முறையொன்றை அறிமுகப் படுத்துவதற்கு விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க இருப்பதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சி. பி. ரத்னாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சரவை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தனியார் பஸ்களில் டிக்கெட்டுக்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டை முறையொன்றை அறிமுகம் செய்ய தனியார் போக்குவரத்து அமைச்சு இதற்கு முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தது.

இது தொடர்பில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டி ருந்தாலும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அமைச்சு கூறியது.

இந்த நிலையிலே மொபிடெல் நிறுவனத்தினதும் மக்கள் வங்கியினதும் ஒத்துழைப்புடன் முற்கொடுப்பனவு அட்டை முறையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. tk

Published by

Leave a comment