தங்கத்தின் இறக்குமதி வரி 100 வீதம் குறைப்பு

goldbar[1]கொழும்பு: தங்கத்திற்கான இறக்குமதித் தீர்வை 100 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் தங்கம் மீதான சுங்கத் தீர்வை முற்றாக நீக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்தது.

2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி முன்மொழிந்த தற்கமையவே தங்கத்திற்கான இறக்குமதி தீர்வை முற்றாக நீக்கப்பட்டு ள்ளது. இதன்படி தங்கத்தின் விலை பெருமளவு வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் தங்கத்திற்கு 10 வீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. தற்பொழுது தங்கத்தின் சந்தை விலை 41,500 ஆக உள்ளதோடு, இறக்குமதித் தீர்வை நீக்கப்பட்டதன் மூலம் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாவை விடக் குறையும் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை நேற்று முதல் அமுலாகும் வகையில் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான துறைகளுக்கு சுங்கத் தீர்வை வழங்கப்பட்டுள்ளது. தேயிலைத் தொழிற் துறையுடன் தொடர்புடைய இயந்திரங்கள் மீதான இறக்குமதி தீர்வை சீரமைக்கப்பட்டுள்ளதோடு உருக்கு மற்றும் சீமெந்து தொடர்பிலும் வரி சீரமைக்கப்பட்டுள்ளன. பாவிக்கப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதி வரி நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. tk

Published by

Leave a comment