
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் அச்சிடப்பட்ட பதாதையொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. யாழ். சென். பற்றிக்ஸ் வீதிக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்த பதாதையே விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் யாழுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவரின் வருகையைச் சிறப்பிக்கும் நோக்குடன் வீதிகளில் ஜனாதிபதியின் படத்துடன் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு தொங்கவிடப்பட்டிருந்த பதாதை ஒன்றினையே விஷமிகள் தீக்கிரையாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இப் பதாதை எரிக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
VK
Leave a comment