உள்ளுராட்சி செயலாற்றுகை போட்டியில் காத்தான்குடி நகரசபை முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை சரியானதா? PMGGயின் நகரசபை உறுப்பினர் சபீல் (நளீமி) கேள்வி

safeel naleemiPMGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி; காத்தான்குடி நகரசபை தவிசாளர் மற்றும் அவரது செயற்பாடுகளுக்கெதிராக பல்வேறு வகையான குற்றச் சாட்டுகள் உள்ளுராட்சி உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் ஆளுனர் போன்ற உயரதிகாரிகளுக்கு முன்வைக்கப்பட்டு விசாரனைகள் இடம்பெறுகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி செயலாற்றுகை போட்டியில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி தினைக்களம்

காத்தான்குடி நகரசபைக்கு முதலாம் இடத்தை வழங்கியிருப்பது ஆச்சரியமளிப்பதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ALM. ஸபீல் (நளீமி) கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் காத்தான்குடி நகரசபையினால் சிறுவர்களுக்காக நடாத்தப்பட்ட நோன்புப் பெருநாள் பஸார் கணக்கறிக்கை இதுவரை சபையில் சமர்பிக்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவது, இக்கணக்கறிக்கையில் மோசடிகள் இடம்பெற்றிருக்கும் என்ற அச்சம் நிலவுகின்றது.

அத்துடன் நிலையியற் குழுக்களில் இருந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அநியாயமான முறையில் நீக்கப்பட்டு நிலையியற் குழுக்களின் செயற்பாடுகளை தவிசாளர் முன்னெடுப்பதும், எடுக்கப்பட்ட சபை தீர்மானங்களில் இடைச் செருகல்களை மேற்கொண்டு தீர்மானம் பெறப்பட்டதாகக் கூறுவதும் நகரசபையில் இடம்பெறும் நாளாந்த நடவடிக்கையாக மாறியிருக்கிறது.

இதேபோல் கடந்த மாதம் தவிசாளர் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றிருந்த வேளை பதில் தவிசாளரிடம் நான்கு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபை அமர்வினை அவசரமாக கூட்டுமாறு கோரியதும்இ,அதுபோன்று உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பதில் நகரசபைத் தவிசாளருக்கும் செயலாளருக்கும் இச்சபை அமர்வினைக் கூட்டுமாறு கட்டளையிட்டிருந்தும் மேற்படி இருவரும் அவரது கோரிக்கையினை அலட்சியம் செய்து சபையினைக் கூட்டாது காலங்கடத்தியமையையும், அதற்கெதிராக உள்ளுராட்சி ஆணையாளர் நகரசபை செயலாளரிடம் அறிக்கை கோரியிருக்கின்ற சூழ் நிலையில் இப்படியான அறிவிப்பு வெளியாகி இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Published by

Leave a comment