மட்டக்களப்பு: மட்டக்களப்பு நகரத்தில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி பூங்கா மற்றும் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத்திற்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நீருற்றுப் பூங்காவும் நேற்று திங்கட்கிழமை (18) காலை திறந்து வைக்கப்பட்டன.
மகாத்மா காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை இதன்போது அணிவிக்கப்பட்டது. ‘தேசத்திற்கு மகுடம்’ திட்டத்தின் கீழ் 28 மில்லியன் ரூபா செலவில் மகாத்மா காந்தி பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளில் பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் கே.சிவநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். lk
![Gandi%20Palam.-2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/gandi20palam-21.jpg?w=780&h=518)
![Gandi%20Palam[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/gandi20palam1.jpg?w=780&h=518)
Leave a comment