கெப்டவுண்: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் பேசும் சக்தியை இழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனது 95வது பிறந்தநாளைக் கூட மருத்துவமனையில் தான் கொண்டாடினார் மண்டேலா.
மண்டேலாவின் உடல்நிலைக் குறித்து பல்வேறு மாறுபட்ட தகவல்கள் பரவிய நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுக்கத் தொடங்கினார் மண்டேலா. இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாகவே உள்ளதாகவும், அவரால் பேச முடியவில்லை எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தகவலை மண்டேலாவின் மனைவியும் உறுதி செய்துள்ளார். மண்டேலா தனது முக அசைவுகள் மூலமே குடும்பத்தினருடன் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் என அவரது மனைவி வின்னி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மண்டேலாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றார் அதிபர் ஜேக்கப் ஜுமா. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜூமா நெலசன் மண்டேலாவின் உடல்நிலைக் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
![mandela[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/mandela1.jpg?w=107&h=150)
Leave a comment